லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் மாதகல் கிழக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் உதவி…!

இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினர் மானிப்பாய் நாம் நண்பர்கள் அமைப்பினுடாகவும் மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகத்தினுடாகவும் மாதகல் கிழக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியுள்ளது. பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வு கடந்த 25ம் நாள் மாதகல் கிழக்கு இளைஞர் கழக தலைவர்அ.பபில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மாதகல் கிழக்கு சகாய மாதா அன்னைஆலய பங்குத்தந்தை ஜே.அருள்தாசன் இளைஞர் பா.உறுப்பினர் க.உசாந்தன் மானிப்பாய் மேற்கு இளைஞர் கழக தலைவர் பே.சாம்பவி சண்டிலிப்பாய் மேற்கு இளைஞர் கழக தலைவர் நா.கஜீலன் ஆனைக்கோட்டை இளைஞர் கழகத்தலைவர் எப்.எக்ஸ்.டி.குரே நாம் நண்பர்கள் அமைப்பினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 

Share:

No comments:

Post a Comment