அமுதுப்புலவர் நான்காம் ஆண்டு நினைவு விழாவில் கவிஞர் அருள் சுப்பிரமணியம் ஆற்றிய நினைவுப்பேருரை…!

2014- இளவாலை அமுது என்று இலக்கிய உலகத்தால் அழைக்கப்பட்ட செவாலியர் புலவர் அடைக்கலமுத்து அவர்களின் நான்காவது ஆண்டு நினைவுச் சொற்பொழிவு கனடா மார்க்கம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆர்மடேல் பொதுமக்கள் மண்டபத்தில் 30-11-2014 ஞாயிறு மாலை நடைபெற்றது.


வாழ்நாட்பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும், பேராசிரியர் வணக்கத்துககுரிய ஜோசெப் சந்திரகாந்தன் அடிகளாரும் நினைவுச் சுடரை ஏற்றி நிகழ்வைத் தொடக்கி வைத்தனர்.
அமுதுப் புலவரின் மாணவரான சபா. அருள்சுப்பிரமணியம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கி நிகழ்ச்சியை நடத்திச்சென்றார். இவர் தமதுரையில் அமுதுப்புலவர் அவர்கள் மாதகலில் ஆசிரியப் பணியை மேற்கொண்ட காலத்தில் மாதகலில் கலை இலக்கியத்தில் நாட்டம்;கொள்ளும் மணவ சமூகமொன்று உருவாக வழி சமைத்தார் என்று பெருமையோடு கூறினார்.அமுதுப் புலவரின் மகனான பேராசிரியர் ஜோசெப் சந்திரகாந்தன் அடிகளார் வரவேற்புரை தொடர்ந்து சிறப்புநிகழ்ச்சியாக அமுதுப் புலவரின் நினைவுப் பேருரை இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முன்னைநாள் பேராசிரியர் கலாநிதி. நா. சுப்பிரமணியன் அவர்கள் “ தமிழிலக்கியத் திறனாய்வியலில் ஈழத்தின் முப்பெரும் ஆளுமைகள்” என்னும் தலைப்பில் கலாநிதிகள் க.கைலாசபதி, கா. சிவத்தம்பி, மற்றும் மு.தளையசிங்கம் ஆகியோரின் திறனாய்வியல்சார் இயங்குநிலைகள் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வையை வெளிப்படுத்தினார்.
காலம் இதழ் ஆசிரியர் திரு. செல்வம் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது நிறைவெய்தியது.


Share:

No comments:

Post a Comment