மாதகல் புனித தோமையர் தேவாலய வளாகத்தில் இன்று மாலைநேரப் பள்ளிக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந்த மாலைநேரப் பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்திற்கான நிதியாக வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் (1,00,000) கொடுக்கப்பட்டுள்ளது...!

அது மாத்திரமல்லாது நலன் விரும்பிகளும், இதற்கான மிகுப்பணத்தை கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். தேவாலய பங்குத்தந்தை அருட்பணி கனீஸியஸ்ராஜ் அடிகளார் இங்கு உரையாற்றுகையில், மாலைநேரப் பள்ளிக்காக உதவி வழங்கியமைக்காகவும், உதவி வழங்குவதாக தெரிவித்திருப்போர்க்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறியதுடன், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நலன்விரும்பிகளும் இந்த கட்டிட வேலைகளுக்காக தம்மால் இயன்ற உதவிகளை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இந்த வைபவத்தின்போது தேவாலய பங்குத்தந்தை அருட்பணி கனீஸியஸ்ராஜ் அடிகளாரும், அன்புக் கன்னியர் மடத்தின் சார்பில் கலந்துகொண்டிருந்த அருட்சகோதரி லெற்ரீஷியா, அருட்சகோதரி சகுந்தலா ஆகியோரும் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுமாக மாலைநேரப் பள்ளிக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்கள். மேற்படி மாலைநேர பள்ளியில் அப் பகுதியைச் சூழ இருக்கக்கூடிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.   


Share:

No comments:

Post a Comment