மாதகல் நுணசை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதர் திரு.எஸ். தட்சிணாமூர்த்தி அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது…!

பாடசாலை வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறு நிகழ்வில், தூதரக அதிகாரிகள் திரு. மார்வா, திரு. ஸ்ரீகாந்த், பாடசாலை அதிபர் திரு. சிவநேசன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் முன்னிலையில் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இப் பாடசாலை மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வறிய மாணவர்கள் கற்கும் பாடசாலையாகும். அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாடசாலைக்கு மேலும் உதவிகளை வழங்குவதாக துணை தூதர் தெரிவித்தார்.
இந்த பாடசாலையில் தரம் நான்கில் பயிலும் ‘கயல்விழி’ என்ற மாணவி இந்திய வீட்டு திட்டத்தின் பயனாளியும் ஆவார். தன் பெற்றோர் மற்றும் சகோதரனை இழந்த இவர், தன் அம்மம்மாவின் துணையுடன் வாழ்ந்து வருகிறார்.
துணைத் தூதர் மற்றும் அதிகாரிகள் கயல்விழிக்காக கட்டப்படும் இந்திய வீட்டையும் பார்வையிட்டனர்.   
Share:

No comments:

Post a Comment