யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலய அணியின் பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான பாராட்டு விழா…!

தேசிய மட்டத்திற்கு தகுதி பெற்ற மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய அணியின் பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான பாராட்டு விழா…
அண்மையில் இடம்பெற்ற மாகாண மட்ட பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டி தொடர்சியாக 3வது தடவையாக இவ் அணி தேசியமட்டத்திற்கு செல்லவுள்ளது.
அணி வீராங்கனைகள் பதக்கம் அணிவிக்கப்பட்டு பூச்செண்டு கொடுத்து கௌரவிக்கபட்டனர்.
முன்னதாக பாண் வாத்தியம் சகிதம் மாதகல் சந்தியிலிருந்து விருந்தினர்களும் வெற்றி பெற்ற அணியின் வீராங்கனைகளும் அழைத்து வரப்பட்டனர்.
பாடசாலை அதிபர் திரு ஜேம்ஸ் பங்குராசு தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் வலிகாமம் வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி கோசலை குணபாலசிங்கம் சண்டிலிப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சிவானந்தராஜா, மாதகல் பங்கு அருட்தந்தை கனீசியஸ்ராஜ், வட மாகாண அதிபர் சங்கத் தலைவர் சிவனேஸ்வரன், பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன், பிரதேச இளைஞர் கழக சம்மேளன ஊடகத்துறைச் செயலாளர் F.X.D.கூரே பாடசாலை அபிவிருத்தி சங்கத் செயலாளர் ஜெராட், ஞானம் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர்.Share:

No comments:

Post a Comment