யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டியும் புதிய மைதான திறப்பு விழாவும் 21.02.2014 வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் திரு.க. சிவனேசன் தலைமையில் நடைபெற்றது...!

மீள் குடியேற்றம் செய்யப்பட்டு 20 வருடங்களின் பின் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் வழங்கப்பட்ட புதிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இம் மைதானத்தை கௌரவ விருந்தினர் வி. சிற்றம்பலம் (மாதகல் நலன்புரிச் சங்க தலைவர்- ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறப்பு விருந்தினர் திரு.ச. சிவானந்தராஜா அவர்கள் (கோட்டக்கல்விப் பணிப்பாளர் சண்டிலிப்பாய்) அவர்களும் கௌரவ விருந்தினராக வி. சிற்றம்பலம் (மாதகல் நலன்புரிச் சங்க தலைவர்- ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

Share:

No comments:

Post a Comment