மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர், சிவமங்கையர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கோமாதா வழிபாடு இடம்பெற்றது…!

இந்த வழிபாட்டில் சுழிபுரம், காட்டுப்புலம், பாண்டவெட்டை, பனிப்புலம், கல்விளான், வறுத்தோலை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் தமது கால்நடைகளைக் கொண்டு வந்து வழிபாடுகளில் பங்குபற்றச் செய்தனர்.
சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தின் சிவத்திரு நரசிங்க சித்தர் சுவாமிகளின் தலைமையில் இந்த கோமாதா வழிபாடுகள் நடைபெற்றன.  இங்கு பவனியாக அழைத்துக் கொண்டு வரப்பட்ட கோமாதாக்களுக்கு மலர் மாலை அணிவித்து திருநீறு குங்குமம் அணிவிக்கப்பட்டு அமுது படைக்கப்பட்டது.  இந்த வழிபாடுகளைத் தொடர்ந்து சிவதொண்டர், சிவமங்கையர் அமைப்புகளின் ஏற்பாட்டில் நரசிங்க சித்தர் தலைமையில் பௌர்ணமி தின யாகம் மற்றும் சிவ தரிசனம் என்பன இடம்பெற்றன.  ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இங்கு நடைபெறவுள்ள யாகத்தின் முதலாவது யாகம் இன்று நடைபெற்றது. இந்த யாகத்தைத் தொடர்ந்து மதியம் மகேசுர பூசை இடம்பெற்றது.  இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பல்வேறு இடங்களிலும் இருந்து, வருகை தந்துள்ள சிவதொண்டர்களும், சிவமங்கையர்களும் கலந்து கொண்டனர்.
–யாழிலிருந்து அதிரடியின் செய்தியாளர் பா.டிலான்-Share:

No comments:

Post a Comment