யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தால் பாடசாலைக்கென வாங்கித்தரப்பட்ட விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா நிகழ்வுகள்…!

2013-இல்ல மெய்வல்லுநர் போட்டியும்…
இவ் விளையாட்டு மைதானக் கொள்வனவுக்கு உதவியோர்…
யாழ்ப்பாணம் மாதகல் சென்.ஜோசப் மகா வித்தியாலய புதிய விளையாட்டு மைதானத்தைத் திறந்துவைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டிகளிலும் பிரதம விருந்தினராக பங்குகொண்டார்.

மகா வித்தியாலய அதிபர் வீ.நடராசா தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தலைமையுரையாற்றிய அதிபர் அவர்கள் பாடசாலை அபிவிருத்திக்காக நாம் விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் அமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்சமயம் எமது பாடசாலையின்\\\\\\\\\\\\\\\\\\\ இப்புதிய மைதானத்திற்கு சுற்றுவேலி அடைக்க நாம் விடுத்த கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இப்புதிய மைதானம் வீதிக்கு அருகில் அமைந்துள்ள நிலையில் சுற்றுவேலிக்கு மேலதிகமாக மாணவர்கள் விளையாடும் பந்துகள் வீதிக்கு செல்லாமல் இருப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஈ.பி.டி.பியின் செலவிலேயே வலை பொருத்தித் தரப்படும் எனத் தெரிவித்ததுடன் கிடைத்துள்ள இப்புதிய மைதானத்தினை பயன்படுத்தி விளையாட்டுத்துறையிலும் மாணவர்கள் தமது ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய இல்ல மெய்வல்லுனர் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமைக்கு மேலதிகமாக தேசிய கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குகொண்ட மாணவிகளின் அணியினருக்கும் அமைச்சர் அவர்கள் பதக்கங்களை வழங்கியதுடன் தேசிய மட்டத்தில் வர்ணம் பெற்ற மாணவியையும் கௌரவித்தார்.
இந்நிகழ்வில் மாதகல் பங்குத்தந்தை எவ்.கனிஸ்ரியஸ்ராஜ் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராஜா வலி. தென்மேற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் ஜீவா அயல்பாடசாலை அதிபர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டனர்.Share:

No comments:

Post a Comment