...::மரண அறிவித்தல்::... திருமதி.இ.கமலாம்பாள்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :  05/ 06/ 1923
இறப்பு : 12/11/2013

திருமதி கமலாம்பாள் இரத்தினக்குருக்கள்
 இந்தியா கேரளாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பாள் இரத்தினக்குருக்கள் அவர்கள் 12-11-2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவஸ்ரீ பரமேஸ்வரக்குருக்கள், பார்வதி அம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற சிவஸ்ரீ இரத்தினக்குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும், பிரம்மஸ்ரீ பத்மநாதசர்மா(சென்னை), பிரம்மஸ்ரீ இராமச்சந்திரசர்மா(கொக்குவில்), ஸ்ரீமதி பிறேமகுமாரி(கொக்குவில்), பிரம்மஸ்ரீ ஜெகதீஸ்வரசர்மா(நோர்வே), பிரம்மஸ்ரீ ஜெயமுரளிசர்மா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற லலிதாம்பாள், சாரதாம்பாள்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ சிதம்பரநாதசர்மா, சிவஸ்ரீ சிவபாதசுந்தரகுருக்கள்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரம்மஸ்ரீ மார்க்கண்டேயசர்மா(கொக்குவில்), ஸ்ரீமதி வசந்தி(சென்னை), ஸ்ரீமதி யோகேஸ்வரி(கொக்குவில்), ஸ்ரீமதி லதாதாட்சாயினி(நோர்வே), ஸ்ரீமதி ஸ்ரீலேகா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும், அமிர்தகலா, வசந்தகலா, சுகந்தகலா, ஜெயந்தகலா, சசிரேகா, பிரம்மஸ்ரீ சசிகாந்தசர்மா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், கவிதா, விஜிதா, சுபா, பிரசாந்சர்மா, ரம்யா, சந்யா, ஆரணி, பிரதீபசர்மா, பிறேமதீபசர்மா, பார்த்தீபசர்மா, ரக்ஷனா, கீர்த்தனா, ஆத்மிகா, கீதயன்சர்மா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ம்ருத்தும்ஜெய், ரக்ஷிதா, ஹரிகேஸ், ஸ்வத்திகா, சதுர்த்திகன், தீனசரண்யா, மிருதுலா, பிரனுசா ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2013 வியாழக்கிழமை அன்று கொக்குவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94214590705
- — இலங்கை
தொலைபேசி:+94212052667
Share:

No comments:

Post a Comment