கனடா மாதகல் நலன்புரிச்சங்கம் 20வது ஆண்டு நிறைவு – சுவிஸ் மாதகல் நலன்புரிச்சங்கம் வாழ்த்து…!

ஊரின் உயர்வு காண
உன்னதமான சேவைதனைப் புரிய
உயரிய நோக்குடன்
வீறு நடை போட்டு……
20வது ஆண்டினைத் தொடும்
கனடா மாதகல் நலன்புரிச் சங்கத்தினை
வாழ்க வாழ்க பல்லாண்டு – என
வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றோம்…நாம்
தான் மட்டும் வாழ நினையாது
தான் பிறந்த மண்ணையும் மக்களையும்
வாழவைக்கும் அனைத்து கனடா வாழ்
உள்ளங்களுக்கும் – இவ் வேளையில்
வாழ்த்துக்களைக் கூறி -நாம்
நன்றி உடையவர்களாகின்றோம்.

எம் மாதகல் மண்ணின் சிறார்களின்
அத்திய அவசியமான கல்விப் பாதை தொடங்கி…
எல்லா விதமான தேவைகளையும் எம் மக்களுக்கு
வழங்கி தனது பணியை சரியான பாதையில்
கொண்டு செல்லும் கனடா மாதகல் நலன்புரிச்
சங்கத்தின் பணிகண்டு நாம் பிரமித்துப் போகின்றோம்.

குன்றிலிட்ட தீபம் போல் கனடா மாதகல் நலன்புரிச்சங்கத்தின் புகழ் ஒளி எல்லா திசைகளும் பரவி உயர்வு பெற வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்.

சுவிஸ் மாதகல் நலன்புரிச்சங்கம்

சுவிஸ்

Share:

No comments:

Post a Comment