கனடாவில் இடம்பெற்ற தோழர் குமரனின் (வி.பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வுகள்…!

2013-தோழர் குமரனின் (வி.பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வு… 
 மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அவர்களின் நினைவுகளை பகிருமுகமாக ஓர் நிகழ்வு கனடாவின் டொரோண்டோ பெரும்பாகத்தின் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் அங்காடிகள்… வர்த்தக… சேவை நிலையங்கள் உள்ள கட்டிடத் தொகுதியான GTA SQUARE MALL இல் கடந்த ஞாயிரன்று இடம்பெற்றது.
ஆரம்ப காலங்களில் இலங்கை கம்யூனிச கட்சி; (மாஸ்கோ பிரிவு) செந்தமிழர் இயக்கம்; காந்தீயம் ஆகிய அமைப்புக்களில் செயற்பட்டவராகவும் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (PLOTE) உறுப்பினராகவும் இருந்த மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அவர்களின் நினைவுகளை பகிருமுகமாக நிகழ்வு… பலதரப்பட்ட அமைப்பை… பின்புலத்தை… கொண்டவர்கள் கொண்ட… மண்டபம் நிறைந்த… நிகழ்வாக தோழர் குமரனின் மனித நேய செயர்ப்பாடுகளுடனான நினைவுகளுடான சீலன் அவர்களின் தலமையுரையுடன் ஆரம்பித்து…
தோழர் குமரன் அவர்களின் சுயநலமில்லா மனித நேயம்… தான் பிறந்த ஊர்… மண்… பாடசாலை… என்று மட்டுமலாமல் சகல மக்களின் சுதந்திரம்… வாழ்வுரிமை… என்று ஓர் கொள்கையுடன் வாழ்ந்து… செயற்பட்டு… பின் தான் நேசித்த மக்கள் மத்தியில் உயிருடன் வாழ தான் சேர்ந்தவர்களாலேயே அச்சுறுத்தப்பட்ட நிலையிலும்… புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற நிலையிலும்… தான் பிறந்த ஊர்… கல்வி கற்ற பாடசாலையின் வளர்ச்சியில் தீவிர அக்கறை கொண்டு ‘மாதகல் நலன்புரி அமைப்பை’ உருவாக்கியது மட்டுமலாமல்…
மாதகல் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கிளைகளை நிறுவி… தான் கல்வி பயின்ற St. Joseph’s கல்லூரியின் வளர்ச்சிக்காக ஒரு கோடி பணம் சேர்த்து அனுப்ப தூண்டுகோலாக இருந்தார் என்று மட்டுமல்லாமல்… தொடர்ந்து சமூக வளர்ச்சியினூடான அங்கத்துவடுடான அக்கறையுடன் வாழ்ந்தததை மறைந்த தோழர் குமரன் அவர்களின் பிறந்த ஊரான மாதகலில் அவரின் அயலவராக மட்டுமலாமல் … அவருடன்.. பழகிய… அவரை நன்கு அறிந்த கனடா மாதகல் நலன்புரி சங்கத்தை சேர்ந்த… முன்னால் St. Joseph’s கல்லூரி அதிபர் அருள் சுப்பிரமணியம் அவர்கள் நினைவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து மாதகலை பிறப்பிடமாக மட்டுமல்லாமல்… தோழர் குமரன் அவர்களுடன் ஒரே பாசறையான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த நண்பர் பாபுஜி அவர்கள் தனது நினைவுகளை மீட்கும் போது தோழர் குமரன் அவர்களை விட தான் வயதில் சிறியவனாக இருந்திருந்தாலும்… St. Joseph’s கல்லூரி மதிலில் ஏறி இருந்து கதைப்பதையும்… வெலிங்கடன் சினிமா கொட்டகையின் பின்புறத்தில் வைத்து ராஜனை தான் தோழர் குமரன் அவர்கட்கு அறிமுகப்படுத்தியதையும்… வடலியடைப்பு வயல்களின் மத்தியில் இருந்த தேநீர் கடையில் வைத்து தன்னையும் மறைந்த கனகுலசிங்கம் அவர்களையும் 82ம் ஆண்டு இராணுவம் சுற்றி வளைத்து கைது செய்யும் போது துவிச்சக்கர வண்டியில் தோழர் குமரன் அவர்கள் அவ்விடத்தில் வந்து தப்பி சென்றதையும் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து ஆரம்ப காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த தயாபரன் தனது நினைவுகளில்… மீட்குமிடத்து… தோழர் குமரன் அவர்கள் மத்திய குழுவில் இருந்து செயற்பட்டதையும்,.. அவரின் மக்கள் மீது கொண்ட நேசிப்புடனான நற்பண்புகளை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட… டானியல் அவர்கள் தான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த காலத்தின் ஒரு பகுதியில் ஒரத்தநாட்டில் தன்னை ஓர் கீற்றுக் கொட்டகைக்குள் (ஓலை) அடைத்து வைத்திருக்கும் போது ஜான் மாஸ்டர் அவர்கள் வெளியில் இருந்து அரசியல் வகுப்பு எடுத்ததை தான் ஓலைகளின் ஓட்டைகளுடாக பார்த்ததையும்… கரவெட்டி உள்ளூர் மக்கள் நகர் பகுதியை (main road) அண்டி நகர்ந்து உள்ளதையும்… (அவர் விடுமுறைக்கு சென்று தற்போது இங்கு திரும்பி விட்டார்) அதனால் அப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள்… வாய்ப்பு… என்று தோழர் குமரனின் (வி. பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வை விட்டு தடம் மாறி தனது பகிர்தலை பகிர்ந்து கொண்டார்.
மேலும் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட குமார் அவர்கள் கழகத்தில் இருக்கும் போது தோழர் குமரன் அவர்களுடன் ஒன்றாகப் பழகியதையும்… அவரின் சமூக சிந்தனையுள்ள நற்பண்புகளையும் பகிர்ந்து கொண்டார். (இரு வாரங்களின் முன் மாதகல் நலன்புரிச் சங்கம் தோழர் குமரன் அவர்களை நினைவு கூர்ந்த நிகழ்விலும் கலந்து கொண்டு தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்).
தொடர்து ராஜன் அவர்கள் தனது நினைவுகளை பகிரும்போது… தனக்கு ஒன்றரை வருடமாக தோழர் குமரன் அவர்களுடன் ஒன்றாகப் பழகியதையும்… தோழர் குமரன் கொண்ட சமூக சிந்தனைகளை எடுத்துக் கூறி… இவ் நினைவு பகிர்தல் ஓர் அஞ்சலியாக மட்டுமல்லாமல் தோழர் குமரன் அவர்கள் விட்டுச் சென்ற பணியை புரிந்து கொள்ளலுடன் தொடர வேண்டும் என்று ஓர் கோரிக்கையை வைத்தார்.
தொடர்ந்து மொன்றியலில் .இருந்து வருகை தந்த இளவாலையை சேர்ந்த நீண்ட கால தோழர் போத்தார் அவர்கள் தோழர் குமரன் அவர்கட்கு தனது நினைவுகளுடான அஞ்சலியை செலுத்த… ஜீவன் அவர்கள் மொரட்டுவா பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் போது காந்தியத்தில் சென்று சமூக சேவை செய்ததையும்… பின் 83 இனக்கலவரத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து சமூக சேவைகளில் சேவை செய்ததையும் நினைவு கூர்ந்தார்.
கடைசியாக பாலா அவர்கள் தான் தோழர் குமரன் அவர்களுடன் நெருக்கிப் பழகிய கழக காலத்தை மட்டுமல்லாமல் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த காலத்தில் தான் அவர் மேல் வைத்திருந்த பற்றையும்… கடையாக அவரை சந்தித்ததையும்… நினைவு கூறுமிடத்து… தொடர்ந்து வாயால் தனது நண்பனின்…. தோழனின்… இழப்பை பகிரமுடியாமல் கண்கள் நீர் மல்க… நன்றியுரையுடன் ஒருங்கமைக்கப்பட்ட நினைவுகளை’ பகிர்தல் நிகழ்வு’ நிறைவு பெற…
நீண்ட காலத்தின் பின் சந்தித்த பலர் தமது நினைவுகளை பகிர்ந்து கொள்ள… தமிழரின் கூட்டம் என்றால் பிந்தித் தானே தொடங்கும் என்று பலர் நேரம் தாழ்த்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காந்தியத்தில் சேவை செய்தோர்… கழகத்தில் குமரனை நன்கு அறிந்தவர்கள்… பலர் இங்கிருந்தும்…
2009 இன் பின் மண்டபம் எடுத்து தோழர் சுந்தரத்திற்கு அஞ்சலி செலுத்தியவர்கள் என்று ஒருவரையும் காணவில்லை.

– அலெக்ஸ் இரவி 


athirady-இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன….
Share:

No comments:

Post a Comment