மாதகல் மீனவர் சங்க பொது மண்டபத்தில் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் அங்கஜன் மக்கள் சந்திப்பு…!

2013-வடமாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பொன்று மாதகல் மீனவர் சங்க பொது மண்டபத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சிரேஸ்ட அமைச்சர் ரெஜினோலட் குரே கலந்து கொண்டு பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். இந்தச் சந்திப்பில் 200ற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து இச்சந்திப்பில் வெளிப்படுத்தினர். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர், உரையாற்றும் போது கடந்த கால போரினால் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் உங்கள் வேதனைகளை யான் அறிவேன். ஏன் எனது காணிகளும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே முடங்கியுள்ளது. ஆகவே உங்களைப் போன்றே நானும் எப்படியாவது அந்த நிலங்களை பெறுவதற்காக போராடுவேன். அன்றைய நாட்களில் மனரீதியாக நாம் இலங்கையின் இரண்டாம்தர மக்கள் என்ற நிலையில் இருந்தோம். ஏனெனில், அன்று தெற்குப்பகுதி மக்களுக்கு கிடைத்த அபிவிருத்திகள் எமக்கு கிடைக்காமல் இருந்ததால் அத்தகைய உணர்வை நாம் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைய காலப்பகுதியில் நிலைமை மாற்றமடைந்தது. இப்போது வடக்கு மாகாணமே அபிவிருத்தியின் மையப்பகுதியாக இருக்கின்றது. எனவே நாம் இன்றைய நிலையில் ஏனைய மாகாணங்களை போன்று எமக்கு தேவையான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, எமக்கான முன்னேற்றங்கள் அனைத்தையும் முடிந்தவரையில் பெற்றுக் கொள்ள வேண்டும். எமக்கான உரிமைகள் பற்றி பாராளுமன்றத்தின் மூலமும், எமக்கான அபிவிருத்திகள் தொடர்பில் மாகாண சபையின் மூலமும் பெற்றுக் கொள்வதே பொருத்தமான செயற்பாடாகும். நாம் இப்போது நிற்கும் கட்டம் மிக முக்கியமான கட்டம். எதிர்காலத்தை நோக்கிய சரியான பாதையை தெரிவு செய்ய வேண்டிய கட்டத்தில் நிற்கின்றோம். எனவே இந்த மாகாண சபைத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் சிந்தித்து பொருத்தமான தலைவர்களை தெரிவு செய்யுங்கள; என கேட்டுக் கொண்டார். (“அதிரடி” இணைய யாழ் நிருபர் பா.டிலான்)


Share:

No comments:

Post a Comment