...::மரண அறிவித்தல்::... திரு.வே.ஜெயரட்ணம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 03 /12 /1947
இறப்பு : 19/01/2013

பெயர் : வேலுப்பிள்ளை ஜெயரட்ணம்
துறைமுகம் மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஜெயரட்ணம் நேற்றுமுன்தினம் (19.01.2013) சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கமணியம்மா தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி புவனேஸ்வரியம்மா தம்பதியரின் மருமகனும், சந்திரமலரின் அன்புக் கணவரும், ஜெயச்சந்திரன், துளசி, ஜெயபிரகாஷ், ஜெயராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுவர்ணா, காலஞ்சென்ற அன்ரன் யூட் செல்வராஜா ஆகியயோரின் பாசமிகு மாமனும், ஜெயகாஸ், கவிநயா, புவிதன், தரணிகா ஆகியோரின் பேரனும், சிவபாக்கியம், காலஞ்சென்ற சண்முகசுந்தரம் மற்றும் பரமேஸ்வரியம்மா, சிவராசா, தேவாமிர்தம், ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நுணசை வீதி, மாதகல் எனும் முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (21.01.2013) திங்கட்கிழமை பி.ப 1.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பி.ப 3.00 மணிக்கு மாதகல் போதிப்புலம் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – நுணசை வீதி, மாதகல்.

Share:

No comments:

Post a Comment