மாதகல் மேற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை திறப்பு விழாவும்…!

2012-22 வருடங்களின் பின்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ள மாதகல் மேற்குப் பகுதியில் குடியமர்ந்த 137 குடும்பங்களுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டிலிருந்து கடற்படையினர் கட்டுப்பாட்டிலிருந்து வந்த மாதகல் மேற்கு பிரதேசம் கடந்த மாதம் 22 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டது. 

மீளக்குடியமர்ந்த மக்களுக்கு ஆரம்பத்தில் உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை. பின்னர் 221 குடும்பங்களுக்கு பற்றைகளைத் துப்புரவு செய்வதற்குரிய உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால், மீளக்குடியமர்வதற்குப் பதிவு செய்த 261 குடும்பங்களில் 137 குடும்பங்களுக்கு தலா 12 தகரங்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. 137 குடும்பங்களும் உடனடியாகவே மீளக் குடியமர்வதற்குப் பதிவு செய்துள்ளமையாலேயே அவர்களுக்குத் தகரங்கள் வழங்கப்பட்டதாகவும், ஏனைய குடும்பங்களுக்கு விரைவில் அவை வழங்கப்படும் என்றும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் யாழ்.மாவட்ட செயலகத்தால் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. மாதகல் கிராமசேவையாளர் ஊடாக வழங்கப்பட்ட தென்னம்பிள்ளை.Share:

No comments:

Post a Comment