...::மரண அறிவித்தல்::... திருமதி.சு.அன்னப்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 02 /06 /1938
இறப்பு : 19/11/2012

திருமதி. அன்னப்பிள்ளை சுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் மாதகலையைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 19-11-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், சற்குணலீலா(கனடா), சாந்தகுமார்(கனடா), தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), மகேஸ்வரன்(கலிபோர்னியா), ஞானசக்தி(கனடா), ஞானபாலன்(கனடா), தவக்குமாரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், தவராசா, கருணைராணி, மதிவதனி, செல்வராஜா, மோதிலா, விசாகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சிவபாக்கியம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா மற்றும் கந்தசாமி, பரமேஸ்வரி, சண்முகசுந்தரம், லட்சுமிப்பிள்ளை, காந்திமதி, விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், லோஜி, ராஜி, ரஜனி, மாலி, கோணேஸ்வரன், கௌதமி, ஜயந்தன், மகிஷா, ஷோபிகா, ஹம்சிகா, கஜாகரன், தாரணி, நர்மதா, சஞ்யேஜன், சச்சின், ஹரிஷான், சுகிஷ், தருண், மயூ, புவி, சீலன், முரளி, யோகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், யதுன்ஜா, மிதுன்ஜா, சதுஷா, லட்சியா, பிரபாகரன், சாள்ஸ்சன், கிசோத் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment