…::மரண அறிவித்தல்::… தியாகராஜா சச்சிதானந்தம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1929/01/15
இறப்பு : 17/11/2017
தியாகராஜா சச்சிதானந்தம்


சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கு கைதடியை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா சச்சிதானந்தம் நேற்று முன்தினம் (17/11/2012) சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தியாகராஜா முத்துப் பிள்ளை தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதியரின் மருமகனும், செல்வராணியின் (ஓய்வு பெற்ற கிராமிய வங்கி லிகிதர்) அன்புக் கணவரும், ரிஷிகேசன் (ஆசிரியர், சென்.ஜோன்ஸ் கல்லூரி, விரிவுரையாளர் பட்டப்படிப்புக்கள் பிரிவு, யாழ்ப்பாணக் கல்லூரி), சுலக்ஷனா (கனடா), தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராதிகா, வரதராஜன் (மாதகல் கனடா), சத்தியரூபன் (முள்ளி வளை வவுனியா), சிவகுமாரி (ஜேர்மன்), தாரணி (லண்டன்), பூங்கோதை (அமெரிக்கா) ஆகியோரின் மாமனும், ரிஷாங்கி, விஷாளி, புருசோத், பிரவீன், அட்ஷயன், அப்ஷயன் ஆகியோரின் பேரனும், சரஸ்வதி, விஜயலக்ஷ்மி, கங்காதரன் (ஓய்வு பெற்ற அதிபர் வீமன்காமம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் சகோதரரும், பத்மாசினி, கிருஷ்ணகுமார் ஆகியோரின் உடன் பிறவாச்சகோதரரும், காலஞ்சென்றவர்களான சின்னப்பா, புவனேஸ்வரி, சிவபாலன் மற்றும் அகிலேஸ்வரி, இராசமலர்தேவி, கங்காதரன் ஆகியோரின் மைத்துனரும், தங்கராசா (கல்வியங்காடு), சிவானந்தசோதி, செல்வ ரத்தினம் ஆகியோரின் சகலனும், அனுரங்கா, சுதர்சினி, தயாளினி, தமிழினி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.11.2012) திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கைதடி ஊரியான் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : ரிஷிகேசன் (மகன்)

தொடர்புகளுக்கு
ரிஷிகேசன் (மகன்) - பிள்ளையார் கோயில் வீதி, கைதடி தெற்கு, கைதடி.
Share:

No comments:

Post a Comment