20 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணில் மாதகல் மேற்கு மக்கள்…!

2012-(எஸ்.கே.பிரசாத்)tamilmirror

 மாதகல் மேற்கு பிரதேசத்தை கடற் படையினர் விடுவித்துள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதகல் மேற்கு பிரதேசத்தில் வசித்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல இன்று திங்கட்கிழமை பிரதேச செயலகத்தால் அனுமதிக்கப்பட்டனர். மழையினையும் பொருட்படுத்தாது இன்று காலை தொடக்கம் தங்கள் காணிகள் மற்றும் வீடுகளை துப்பரவு செய்யும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் சொந்த நிலத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் அப்பகுதி மக்கள தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையில், “1992 ஆண்டு இங்கிருந்து இடம்பெயர்ந்து 20 வருடங்களுக்கு பின்னர் எங்கள் நிலங்களில் குடியேறியுள்ளளோம். இந்த 20 வருட கால வாழ்க்கையில் பல்வேறு இடப்பெயர்வுகள், துன்ப சம்பவங்கள் என பலவற்றை நாங்கள் அனுபவித்திருக்கின்றோம். இங்கு வந்து பார்க்கும் போது இங்கிருந்த வீடுகள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. எமக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு தகரங்கள் தருவதாக கூறியுள்ளார்கள். இங்குள்ள பற்றைக்காடுகளை அழித்து நாம் இங்கு வந்து குடியேறுவதற்கு 2 மாதங்களுக்கு மேலாகும் எமது சொந்த நிலத்தில் இப்போது குடியேறவிட்டாலும் எமது நிலத்தில் நிற்பது எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது” என்றனர்.
Share:

No comments:

Post a Comment