நினைவுச் சிதறல்கள்..!

நினைவுச் சிதறல்கள்

சங்கமித்திரை வந்திறங்கிய
சம்புல் துறைமுகம்
மாது + அகல் – மாதகல்
என்ற நாமம் கொண்டது


வயல்கள் பல நிறைந்த இடம்
கடல் வளம் மிக்க இடம்
வினைகள் தீர்க்கும் விநாயகா
அந்த அரசடி அது உன் இடம்


அம்மன் இருந்து அருள்
பாலித்திடவே பாணாவெட்டி
நுணா மரங்களின் மத்தியிலே
கடம்பமரம் அதில் கடம்பனவன்


மரபுவழியில் நுணசை
முருகனாயும் நீ ஆனாய்
உன் அருகில் குடி கொண்டார்
சாந்த நாயகி சமேத சந்திர மௌலீசர்


வயலுக்கு நடுவில் ஐயனார் வந்துதித்தார்
காஞ்சிபுரத்தடியில் வைரவர் குடிகொண்டார்
மாதகலின் மத்தியிலே பேச்சி அம்மனும்
கடலுக்கு அருகிலே லூர்து அன்னையும்


கல்விதனை பெற்றிடவே
நுணசை சென்யோசேப்
சென் தோமஸ் விக்னேஸ்வரா
கல்விச்சாலைகள் பல


ஓரு கிராம மக்கள் நாம்
ஊரை இழந்து உறவை இழந்து
திக்கு திசையற்று
ஒவ்வோர் ஊரில் ஒவ்வோர் மக்கள்


இடம் பெயந்தது மாறியது
நாம் மட்டுமா – இல்லையே
சம்பில் துறைமுகமும் அல்லோ
ஜம்புகோலப் பட்டினமாகியது


மகிழ்ச்சியுடன் நம் ஊரிலே
நாம் வாழ்ந்த நினைவுகளை
மீட்டுத்தான் பார்க்கிறேன்
பகிர்கிறேன் உங்களுடன்
– சுபா

Share:

No comments:

Post a Comment