யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலய 19 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணியானது 13/06/2012 புதன்கிழமை அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற மாகாணமட்ட பாடசாலைகளிற்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரியை வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தினைத் தனதாக்கிக்கொண்டது…!

கடந்த வருடம் முதன் முதலாக களமிறங்கிய இவ் அணியினர் அந்த வருடத்திலேயே மாவட்ட மட்ட சம்பியனாகியதோடு மட்டுமல்லாது மாகாணமட்டத்தில் நான்காம் இடத்தினைப்பெற்றிருந்தனர். இவ்வருடம் தமது மாவட்டமட்ட சம்பியன் பட்டத்தினை தக்கவைத்ததோடு மட்டுமல்லாது மாகாண மட்ட சம்பியன் பட்டத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Share:

No comments:

Post a Comment