...::மரண அறிவித்தல்::... திருமதி வி.சின்னராசாத்தி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 06 /09/ 1937
இறப்பு : 27/03/2012

திருமதி சின்னராசாத்தி விசுவநாதர்
மாதகலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசாத்தி விசுவநாதர் அவர்கள் 27-03-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், திலகவதி (முத்து) தம்பதிகளின் அன்பு மருமகளும், விசுவநாதர் (இலங்கை) அவர்களின் பாசமிகு மனைவியும், சுடர்விழி(சுவிஸ்), மலர்விழி(ஜேர்மனி), சந்திரகுமார் (கொலண்ட்), கோகுலரூபன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான தில்லைநடராஜா, இன்பம் மற்றும் சிவபாக்கியம் (அவுஸ்திரேலியா), செல்வராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சின்னப்பு (சுவிஸ்), மகேஸ்வரன் (ஜேர்மனி), பிறேமலதா (கொலண்ட்), இந்துஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும், பொன்சோதி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் விசாகதிலகர் (அவுஸ்திரேலியா), காசிராஜா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், அனுஷா (சுவிஸ்), தர்சிகா, தணிகா (ஜேர்மனி), றம்சன், பவிதன், கிசோபன் (கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2012 புதன்கிழமை அன்று மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment