...::மரண அறிவித்தல்::... திரு க.சிவயோகராசா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 02/04/1955
இறப்பு : 12/10/2011

திரு.கதிரவேலுப்பிள்ளை சிவயோகராசா
மாதகலைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை வசித்தவரான, தற்காலிகமாக பிரான்சில் வசித்து வந்த கதிரவேலுப்பிள்ளை சிவயோகராசா அவர்கள் (2011-10-12) புதன்கிழமை இரவு இறைவனடிசேர்ந்தார்.
திருகோணமலையில் காலம் சென்ற கதிரவேலுப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும். மாதகலில் காலஞ்சென்ற தாமோதரப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மாதகல் பரமேஸ்வரியின் அன்பு கணவரும், கனடாவில் வசித்துவரும் தேவி புனிதாவின் அன்புச் சகோதரனும், மகள்கள் மதிவதனி(கனடா),கோவதனி(மாதகல்), ஜெயவதனி(சுவிஸ்), சதிஸ்(லண்டன்), மோகனதாஸ்(மாதகல்), ஆகியோரின் அன்பு தந்தையும், மருமகன்கள் வைரவநாதன்(கனடா), குகநேசன்(சுவிஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும் மணிகண்டன் மிதுசா(கனடா), இலட்சனா மனுசாந்(சுவிஸ்), ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share:

No comments:

Post a Comment