அரசடிப் பிள்ளையார் கோயில்….!

மாதகல் மத்தியில் எழுந்தருளியிருக்கும் விநாயகர், சூழலில் முற்காலத்தில் அந்தணர் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உண்டு.

அவர்களது இல்லங்களும், நிலங்களும் இன்னும் இருக்கின்றன. இக் கோயில் முன் அரச மரம் ஒன்று உண்டு. மேற்கே வாசிகசாலை ஒன்று உள்ளது. அதில் குருநாதர் வசித்தவர். வட மேற்கில் மடம் உண்டு. கோயில் ஆரம்ப காலத்தில் கந்தபுராணம் படிக்கப்பட்டு வந்தது. அந்தணர் மறையோதி சித்திகள் பெற்றமையால் சித்தி விநாயகர் எனப்பெயர் உண்டானது என்பர்.

இக் கோயிலுக்கு அராலியில் தரும சாதன நிலங்களும் உண்டு. வைகாசி விசாக நட்சத்திரத்துக்கு தேர்த்திருவிழாவும், அடுத்த நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும். மாதந்தோறும் சதுர்த்திப் பூசையும் நடைபெறும். மார்கழியில் விநாயகர் சஷ்டி விரதம் பலராலும் அனுட்டிக்கப்படுகின்றது. தீர்த்த விழாவன்று விநாயகர் மாதகல் துறைக்கு தீர்த்தமாடச் செல்வது மரபு.
சேதுராசா சகோதரர்களால் பஞ்சமுகப் பிள்ளையார் எழுந்தருளி செய்வித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் மீது காரைநகர் கார்த்திகேயக் குருக்கள்; ஊஞ்சல் பதிகம் பாடியிருக்கின்றார்.


யாழ்ப்பாணம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment