மாதகல் தூய லூர்து அன்னை திருத்தல திருவிழா நிகழ்வுகள்…!

2010- உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மாதகல் புனித லூர்துமாதா ஆலய வருடாந்த திருவிழா அண்மையில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயம் மாதகல் கடற்கரைப் பகுதியில் உள்ளது. கடந்த பல வருடங்களாக இந்த ஆலயத்தில் பூசைகள் இடம்பெறாத நிலைமை காணப்பட்டது. தற்போது இந்த ஆலயத்திற்குச் சென்று வர கடற்படையினர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இவ்வருட உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்க்ணக்கான மாதாவின் அடியார்கள் ஆலயத்திற்கு முதல் நாளே வருகை தந்து தங்கியிருந்து, திருப்பலிப் பூசையிலும் திருச்சுரூப பவனியிலும் கலந்து கொண்டனர். -சுபா-
Share:

No comments:

Post a Comment