மாதகல் புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மாதகல் தேவாலய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பிரதேச பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் மாலையிட்டு வரவேற்றனர்…!

2009-அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் மாதகல் பங்குத்தந்தை அருட்திரு ஆனந்தகுமார் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது…
இதில் வரவேற்புரையினை பிரதேச கிராம உத்தியோகத்தர் ஞானாநந்தன் நிகழ்த்தினார். வரவேற்புரையினைத் தொடர்ந்து அருட்தந்தை ஆனந்தகுமார் அடிகளார் மாதகல் பிரதேச மக்களின் தேவைகள் கோரிக்கைகள் குறித்த நீண்ட உரையொன்றினை ஆற்றினார்.
அருட்தந்தையின் உரையின் தொடர்ச்சியாக மாதகல் பிரதேச கல்வி சம்பந்தமான கோரிக்கைகளுடன் புனித சூசையப்பர் மகாவித்தியாலய அதிபர் திரு.நடராஜாவும் கடல் மற்றும் கடற்றொழில் சார்ந்த கோரிக்கைகளுடன் திரு.சகாயம் பீற்றரும் பொதுப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் மாதகல் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான திரு.சிற்றம்பலமும் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் சார்பில் சமாதான நீதவான் திரு.கந்தசாமி அவர்களும் மாதகல் இந்து ஒன்றியம் சார்பில் திரு.நடராஜலிங்கமும் இடம்பெயர்ந்து மீள்குடியேறியோர் கோரிக்கைகள் தொடர்பில் திரு.மா.ஜெரால்ட்டும் தத்தமது உரைகளை ஆற்றியதுடன் அவை தொடர்பான கோரிக்கை மனுக்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளித்தனர்.
மாதகல் பிரதேச பொதுமக்களினதும் பொது அமைப்புக்களினதும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையுரை ஆற்றுகையில் இது எங்கள் தேசம் எங்கள் அரசு.உங்களது கோரிக்கைகள் நியாயமானவை. ஆயினும் அவற்றை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தேவை.ஆயினும் அக்கோரிக்கைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும்.ஒரே இரவில் சகல பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. நான் எதைச் சொல்லுகின்றேனோ அதைச் செய்வேன். எமது மக்களின் இன்றைய பிரச்சினைகளுக்கு ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்தி போராடியவன் என்ற வகையில் நானும் ஏதோ ஒரு வகையில் காரணமானவன்தான்.நாம் ஆயுதம் ஏந்தியது இருப்பதை பாதுகாத்துக் கொண்டு மேலும் உரிமைகளைப் பெறுவதற்காகவே. ஆனால் நடந்தது என்ன? இருந்ததையும் இழந்து விட்டோம்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஓர் பொன்னான வாய்ப்பு.ஆனால் அதையும் தவறவிட்டுவிட்டோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிவரும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டியது மக்களாகிய உங்களது கடமை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.இன்றைய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் ஜெகூ அமைச்சரின் செயலாளர் தயானந்தா ஊடகச் செயலாளர் நெல்சன் எதிரிசிங்க ஈபிடிபியின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் தோழர் மித்திரன் ஈபிடிபியின் தேசிய அமைப்பாளர் கிபி அமைச்சு அதிகாரிகள் அரச அதிகரிகள் ஆகியோரும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share:

No comments:

Post a Comment